ஐம்பதிலிருன்து ஐந்து வரை( From fifty to five)

கைக்குழியில் அடங்கும் நீர் கடலினிலும் அடங்கும்,
தன்னிலை மாறாது இருப்பாய் ஏங்கு சென்றாலும்,
நீராக தோன்றினா‌‌ய் அதனால்.

உயிர் தாங்கும் புவி நில்லாமல் சுற்றும் சூரியனை,
அது போல் என்றும் சோர்ந்து போகாமல் முன்னே சென்றாய்,
புவி ஆக தோன்றினா‌‌ய் அதனால்.

வனம் என்றோ மரக்கன்று என்றோ பாராமல் சுட்டெரிக்கும் தீ அனைத்தையும்,
நீ சினம் கொண்டால் எதிரே நிற்க துணிந்தவர் உண்டோ யவரெனும்?
தீ ஆக தோன்றினா‌‌ய் அதனால்.

வீசும் தென்றல் தழுவும் மலர்‌‌‌களை,
கனிவூரும் உன் சொல் அளிக்கும் ஆறுதலை,
தென்றலாக தோன்றினா‌‌ய் அதனால்.

வண்ணம் பூசிய வானுக்கு இல்லையே எல்லை,
உன் அருகாமையில் வானவில்லை விரல் தொடும் என தோன்றும்,
வாணாக தோன்றினா‌‌ய் அதனால்.

ஐம்பூதம் ஆகி நின்றாய்,
ஐம்பது ஆண்டு கடந்து சென்றாய்,
இன்னும் பல ஆண்டுகள் கடந்து செல்வாய்,
இதுவும் அதுவும் எதுவும் கடந்து செல்வாய்.

Translation:

From fifty to five

Water remains the same regardless of being held within the palms of our hand or being held by the sea,
In the same way, no matter where you go, you never seem to change yourself,
That’s why you seemed like the element – water.

The life-sustaining earth revolves around the sun,
In the same way you keep going forward without ever tiring,
That’s why you seemed like the element – earth.

Fire consumes a forest and a sapling alike,
Is there anyone who dares to stand up to you when you’re enraged?
That’s why you seemed like the element – fire.

Like the flowers caressed by the blowing breeze,
Comfort can be found in your words,
That’s why you seemed like the element – air.

There’s no boundary to the painted sky,
The rainbow seems to be within the reaches of finger when you’re beside,
That’s why you seemed like the element – sky.

You seemed to take the form of all of the five great elements,
Fifty years have passed,
And many more years will pass,
Anything and everything will come to pass.

Leave a Reply

Your email address will not be published.