By Vaitheeswaran.B
அறுக்கவும் முடியாமல்,
கிழிக்கவும் முடியாமல்,
அனுபவிக்கும் சுகமான வலி "காதல்".....
கோடி வார்த்தை கொட்டிக் கிடப்பின்
அவளிடம் மட்டும் பேச வார்த்தை இல்லாமல்
தடுமாறும் இதமான தடுமாற்றம்...
எண்ணிலடங்கா கவிதைகள் வந்து வந்து போகும்,
ஆனால் தேனும் பாலும் புளிக்கும்...
அவள் வார்த்தை மட்டுமே அமிர்தமாய் இனிக்கும்....
தனியாக பேசி, தனியாக அழுது, தனியாக சிரித்து
என மற்றவர் கண்ணுக்கு கேளிக்கை சித்திரம் ஆவோம்... காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்
எதையும் தனியாக செய்யவில்லை அவள் நினைவோடு
எல்லாம் இருந்தும் அநாதையாக இருக்கும்.
அவள் மட்டும் இருக்கையில் ஆகாயத்தில் மிதப்போம்
காதல், காதல் தான்....
By Vaitheeswaran.B
Comments