By Dharshini
அவளின் மௌனம் குரல்
பூவின் இதழ்களான அவள் !!.
தலை நிமிர்ந்து பரணி செல்ல
பல கதைகள்! - நான்கு எழுத்துக்கள்,
படிக்க தொடங்க - பட்டமோ அடங்காதவள்!
தன் வாழ்வில் ஒரு முடிவு
யோசிக்க - சொல் பேச்சு கேள்ளாதவள்!
பிறருக்கு முன் நடக்க -திமிறு பிடித்தவள் !
அவள் மட்டுமல்லாமல் அவளை சுற்றிய
நிழல்களின் தோல்விக்கும் , பெயர் தன்வசம்
பெற்றவள்- அதிஷ்டமற்றவள்
அவள் நிற்கும் இடம் தவறில்லை , அவள்
அங்கே நிற்பது தான் தவறு !
அவளை சுற்றிய பார்வை தவறில்லை, அவள்
அணிந்திருப்பது தான் தவறு!
கனவு!! அந்த மூன்று எழுத்தை அவள் உச்சரிப்பதே
பெரும் பாவம் !!
நடக்க பாதை பிறர் வகுப்பர் ;
சிறகடித்து பறக்க வானம் உண்டு, ஆனால்
பூட்டின் சாவி கை மாறி கொண்டே இருக்க !
அவளின் அதிகபட்ச ஆசை , தன் கைரேகையை
ஒருமுறை அச்சாவி கண்டிட வேண்டுமென்பதே
நின்றால் குற்றம்;நடந்தால் குற்றம்;
சிசு வாய் விடிந்த நொடி முதல் மகள் , குமரி , பெண்
என அத்தனை பருவம் கடந்த போதும்
ஒன்று மட்டும் மாறவேயில்லை -அவள் அவளாக வாழ்வது
ஏனெனில் பிறப்பெடுத்தது அவளென்று!!
Translation :
Voices of her silence
She, the Petal of a Flower!!
To raise her head and walk boldly,
She holds countless stories — of just four letters,
When she begins to read, a degree or dreams she cannot tame!
In her life, a decision to ponder — yet she listens to no one!
To walk ahead of others, she is deemed arrogant.
Not just her, but even the shadows around her failures
Bear her name — she is called “unlucky.”
There is no mistake in where she stands,
The fault lies in the fact that she stands there.
The gazes cast upon her aren’t wrong;
What she wears is the offense!
Dreams — the three-lettered word she dares to utter
Becomes the greatest sin!
The path she walks is decided by others.
There’s a sky to fly with clipped wings,
But the key to the lock keeps changing hands.
Her greatest ambition?
To see her palm lines matched with destiny, just once.
If she stands, it’s a crime;
If she walks, it’s a crime.
From the moment of her innocent cry at birth,
Through every stage — daughter, maiden, woman,
Despite all the transformations,
One thing remains unchanged:
The perspective of she living her life as her’s
Because she was born her!
By Dharshini
Fantastic
A powerful and emotional portrayal of the struggles faced by women.
Wooooooooo
Nice
Nice