By Vaitheeswaran.B
குரு என்ற சொல்லுக்கு
உருவம் கொடுத்த உன்னதமே !
மாணவர்களை நாளை
நாடு காக்கும் நல்லோர்களாய்
சிந்தனை என்னும் சிற்பிகளாய்
சாதனை என்னும் செல்வங்களாய்
சுதந்திரம் என்னும் வளம்சேர்க்க
வார்த்தெடுக்கும் வள்ளலே!
கல்வியைப் போதித்து
அனுபவங்களைப் பகிர்ந்து
கலைளைக் கற்பித்து
வாழ்விற்கு வழிகாட்டும்
வாழ்வியல் புத்தகமே – உம்மை
வாழ்த்துவோம் நித்தமுமே !
By Vaitheeswaran.B
Comments