By Vaitheeswaran.B
வெள்ளைத்தாளின் புதையல் நீ
விபரம் நிறைந்த படையல் நீ
கடக்க முடியாத சாலை நீ
விஞ்ஞானத்தில் புதுமை நீ
விண்ணைத்தொடும் பதுமை நீ
விடை சொல்லும் புதிர் நீ
விடியல் காட்டும் வெளிச்சம் நீ
பழமை காக்கும் பத்திரம் நீ
பண்பு சொல்லும் நண்பன் நீ
புதுமை எழுதும் சித்திரம் நீ
ஞானம் தரும் ஜோதி நீ
உலகை இதனுள் அடக்கும் நீ
அதுவே என் புத்தகம்…
By Vaitheeswaran.B
Comments