By Vaitheeswaran.B
முத்தே பவளமே என உச்சிமுகர்ந்து
பனி வெயிலில் இமைக்குள் பூட்டி
என் சிணுங்களில் சிரித்து
உளமழுகயில் அரவணைத்து
உடல் வாடினில் மடி கொடுத்து
தொப்புள் கொடியில் தொடங்கிய
எம்முறவு
அவளின் உள்ளங்கையில் முடியாதோ?
அந்த பாக்கியம் கிட்டாதோ?
விரல் பிடித்து அவள் காட்டிய
அறம் நிறம் நிறைந்த உலகம்
அறம் தவறி
நிறம் மாறி போனாலும்
அந்த விரல்கள் பிடித்தே
கடந்து போகும்..
By Vaitheeswaran.B
Comments