By Vaitheeswaran.B
கதிரவன் - என்னைக் காணாதே என்று
சொல்லவில்லை
மலர்கள் - என்னைப் பார்க்காதே என்று
சொல்லவில்லை
தென்றல் - என்னை திளைக்காதே என்று
சொல்லவில்லை
அருவி - இங்கு குளிக்காதே என்று
சொல்லவில்லை
சோலை - என்னை ரசிக்காதே என்று
சொல்லவில்லை
சோலைக் குயில்கள் என்னைக் கேட்காதே என்று
சொல்லவில்லை
மாலை - என்னிடம் மயங்காதே என்று
சொல்லவில்லை
கவிஞன் - நான் எழுதியதைப் படிக்காதே என்று
சொல்லவில்லை
ஆயினும் சிலர்
விலகியே செல்கிறார்கள் !
இவர்கள் மனம் மூடிக்கிடக்குது!
By Vaitheeswaran.B
Commentaires