By Vaitheeswaran.B
வாழ்க்கை என்னும் பயணத்தை நோக்கி
கனவு என்னும் கரையை சென்று
ஆசை என்னும் அலைகளை
கண்டுகொள்ளாமல்,
அறிவுரை என்னும் ஆழத்தை நினைக்காமல்,
கஷ்டங்கள் பல நேர்ந்தாலும்
கலங்கரை விளக்கின் வெளிச்சத்தை மனதில்
கொண்டு,
கடந்து வந்த பாதையை நினைத்து
கவலைபடாமல்.
கரைதொடும் நேரம் இதோ
அதுவே நாம் வாழ்வின் வெற்றி.
By Vaitheeswaran.B
Comments